Category: தொழிற்சங்கம்
-
வென்றார்கள் சான்மினா தொழிலாளர்கள்வென்றது சான்மினா தொழிலாளர் சங்கம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், சான்மினா எஸ்சிஅய் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்றளவில், 428 நேரடி நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். கலிஃபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட சான்மினா என்ற இந்த பன்னாட்டு நிறுவனம், 19 நாடுகளில், 80 கிளைகளுடன், 50,000 தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி உள்ளதாக, ஒரு கட்டத்தில் நிர்வாகம் சொன்னது. மிகச் சமீபத்தில், நிறுவனத்தின் இந்திய செயல் நடவடிக்கைகளில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நுழைந்துள்ளது. தொலைதொடர்பு, பாதுகாப்பு, மல்டிமீடியா, என்டர்பிரைசஸ் கம்ப்யூட்டிங், எரி ஆற்றல் மின்துறை, இரண்டாம்,…
-
உற்பத்தி துறையும் தொழிற்சங்கமும்…. கட்டுரையாளர் : Sri haran venkateasn
நாம் அன்றாட வாழ்கையில் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து பல் துலக்கும் டூத்பிரஷ்-டூத்பேஸ்ட் முதல், இரவு படுக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் வரை, அந்த பொருட்கள் அனைத்துமே ஏதோவொரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு – பல கைகள் அவைகளை மாற்றி, பல கைகள் மாறி, நம் கைகளை வந்து அடைந்திருக்கின்றன. இந்த ஆலைகளை நிறுவுவதற்கான முதலை போடுபவர் முதலாளி. அப்படியெனில் தொழிலாளி என்பவர் யார்? பொருள் வடிவமைப்பு(Product Development), தயாரிப்பு திட்டமிடல்(Production Planning), ஆராய்சி மற்றும்…
-
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை….
28/9/2024 சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம் அமைத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை. நிர்வாகமே ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலமே தொழிலாளர் பிரச்சனைகளை அணுகிவந்தது. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலைசெய்யும் தொழிலாளர்கள்கூட ரூ.30,000-ற்கு மேல் சம்பளம் பெறமுடியாத நிலைநீடிக்கிறது. ஊதியஉயர்வு என்ற பெயரில் வெறும் ரூ. 2000 முதல்…
-
இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தென் கொரியா சாம்சங் தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது…
தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் (NSEU) கொரியா பெறுநர் சிஐடியு (சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்) தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தம் சங்கத்தை அங்கீகரிப்பது, சம்பள உயர்வு, வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது.…
-
சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து….
சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து 18.09.2024 அன்று சென்னையில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலையில் வேலைநிறுத்தம் செய்து போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து, சிஐடியு தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட தொழிலாளர்களை காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து 18.09.2024 அன்று சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…
-
சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!
சட்டத்தை நிலைநாட்ட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. சங்கத்திற்கான தேவையை சாம்சங் தொழிலாளர்கள் உணர்ந்ததே 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்துவதற்காகத்தான். ஓய்வு கிடையாது, விடுமுறை எடுக்க முடியாது, எதிர்த்துகேட்டால் தனி அறையில் பூட்டி வைப்பது, எதிர்த்து கேட்பவர்கள் 10…