“உலகத்தை விளக்கிச் சொன்னால் மட்டும் போதாது.அதை மாற்றியமைக்கும் வேண்டும்” என்று மார்க்சிய பொருள் முதல்வாதம் நமக்கு கற்பிக்கிறது.சரித்திர வளர்ச்சியிலே மனிதன் தானும் ஈடுபட்டு செயல்புரிந்து வந்திருக்கிறான்; இந்த உலகில் மனிதன் பல
மாறுதல்களைச் செய்ய முடியும்.
ருஷ்ய கம்யூனிஸ்டுகளின் செயல்களைப் பாருங்கள். புரட்சிக்குத் தயார் செய்து, பிறகு புரட்சியை அவர்களால் நடத்து முடிந்தது. வெற்றி கொள்வதோடல்லாமல் 1918-க்குப் பிறகு மகத்தான கஷ்டங்களுக்கிடையே சோஷலிசத்தை நிர்மாணிக்கும்படியான செயல்களையும் மனிதனால் செய்யமுடியும் என்பதற்கு அவர்களின் செயல்கள் ஜீவனுள்ள உதாரணங்களாகும்.
மனிதச் செயலைப் பற்றிய இந்தக் கண்ணோட்டத்தை மார்க்ஸுக்கு முந்திய லோகாயதவாதம் அறியாதிருந்தது. மனிதன் தன் சூழ்நிலையால் உண்டாக்கப்பட்டவன் என்று அந்தக் காலத்தில் எண்ணினார்கள். ஆனால் மார்க்ஸ் என்ன சொன்னார்? சூழ்நிலையை உருவாக்கு கிறவனும் மனிதனே. ஆகவே தன் செய்கைகளின் மூலமான மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் என்று மார்க்ஸ் போதிக் கிறார்.
சூழ்நிலையின் செல்வாக்குக்கு மனிதன் உட்படுகிறான் என்றாலுங்கூட அந்தச் சூழ்நிலையை, சமுதாய அமைப்பை, அவனால் மாற்ற முடியும். அதன் மூலமாக அவன் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவும் முடியும்.
- ஜார்ஜ் பொலிட்ஸர்
Leave a Reply