
. இளைஞர் நலன் காக்க கோரிக்கை மாநாடு சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. மாநாட்டை இடது தொழிற்சங்க மையம் (LTUC), ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு (ULF), மற்றும் ஒருமைப்பாடு மன்றம் இணைந்து ஒருங்கிணைந்து நடத்தின. தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி தொழிற்சாலைகளில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலையில் வைத்திருப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக வைத்துக்கொண்டு அதைவிட பல மடங்கு ஒப்பந்ததொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கொண்டே செல்வதும் அதன் மூலமாக நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகள்,போராட்டங்களை பலவீனப்படுத்துவது நடைபெற்ற வருகிறது. மற்றொரு புறம் ஒப்பந்த தொழிலாளர்கள், பல்வேறு வகையான பயிற்சி தொழிலாளர்கள் எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகின்றனர் . ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டப்படி வழங்கவேண்டிய குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாய் கூட எந்த நிறுவனங்களும் வழங்குவதில்லை புதிய தொழிலாளர் சட்டம் மூலமாக ஏற்கனவே தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.ஆகையால் நிரந்தர தொழிலாளர், ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர் என பாகுப்பாடுகளை களைந்து அனைவரும் ஒற்றிணையை வேண்டிய தேவையை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.

8மணி நேரத்தை 12மணி நேரமாக மாற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களை 14 மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு விட்டன தமிழ்நாட்டிலும் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக வேலை நேர சட்டம் பின்வாங்கப்பட்டாலும் நிரந்தரமாக நீக்கப்படவில்லை எப்போது வேண்டுமானாலும் கொண்டு வர படலாம் என்ற சூழல்தான் உள்ளது .தொழிற்சங்க அங்கீகாரம் கடுமையாக உள்ள நிலையில் இதுபோன்ற முன்னெடுப்புகள் முக்கிய தேவையாக உள்ளது. தொழிநுட்ப வளர்ச்சி தானியங்கி இயந்திரங்கள் மூலாமாக குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி எடுப்பது ,குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களை சுரண்டும் போக்கு நிரந்தர தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பது சவாலாக உள்ளது ஆகையால் இதுபோன்ற செயல்பாடுகளும் பரந்துபட்ட தொழிலாளர் ஒற்றுமை தேவைப்படுகிறது . ஜனநாயக உரிமையை பறிக்கும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது , துண்டறிக்கை வழங்குவதற்கும் , சுவரொட்டி ஒட்டுவதற்கும் அனுமதி வாங்க வேண்டும் என இல்லாத நடைமுறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அரசுக்கும் காவல்துறைக்கும் கண்டனங்கள் மாநாட்டில் பதிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் ஒருமைப்பாடு மன்றம் தோழர் A.S. புவனேஸ்வரி,ULF தோழர் ரமேஷ் , ஒருங்கிணைப்பாளர் ஒருமைப்பாடு மன்றம் தோழர் ராஜகுரு, ULF மாநில தலைவர் தோழர் மாரியப்பன், கெளரவ தலைவர் தோழர் ராமராஜு, LTUC மாநில செயலாளர் தோழர் ராஜேஷ்,ULF இணை பொதுச்செயலாளர் தோழர் கிறிஸ்டோபர் ,MRF பொதுச்செயலாளர் தோழர் ராஜேந்திரன்,TIDC GEU பொதுச்செயலாளர் தோழர் ஆறுமுகப் பிள்ளை ,ஹீண்டாய் பொதுச்செயலாளர் தோழர் சின்னத்தம்பி, ரெனால்ட் நிசான் பொதுச்செயலாளர் தோழர் மூர்த்தி, ஸ்விங் ஸ்வெட்டர் தலைவர் தோழர் செல்வம், டெய்ம்லர் துணைத் தலைவர் தோழர் மணிமாறன் ,மதர்சன் செயலாளர் தோழர் கணபதி,சான்மினா செயலாளர் தோழர் கலைச் செல்வன்,மேக்னா தலைவர் தோழர் பாலாஜி ,ஒருமைப்பாடுமன்ற தோழர்கள் கதிரேசன், தயாநிதி மாணிகண்டன்,இடது தொழிற்சங்க மய்யம்(LTUC) ஆலோசகர் தோழர் S.குமாரசாமி , ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு (ULF) நிறுவனர் தோழர் பிராகஷ் போன்ற பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்

தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி வீரவணக்கம் செலுத்தப்பட்டது மாநாட்டின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது கோரிக்கைகள்:
1.தொழிற்சங்க அங்கீகரத்திற்கு இரகசிய வாக்கெடுப்பு முறையை சட்டமாக்க வேண்டும்.
2.குறைந்தபட்ச ஊதியம் ரூ26000/-ம் வழங்க வேண்டும்.
3.ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும்.
4.எட்டுமணி நேர வேலை உரிமையை பறிக்ககூடாது.
5.வாரத்தில் 5நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும்.
6.நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணியை உறுதி செய்ய வேண்டும்.
7.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
8.தொழிலாளர் கூட்டம் நடத்த, விழாக்கள் நடத்த அனைத்து வசதிகளும் கூடிய மிகப்பெரிய நவீன தொழிலாளர் பூங்கா அமைத்துதர வேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் வெல்லட்டும்!
-தொழிலாளர் செய்தி பிரிவு