Labour News – India
* பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் – சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்
▪️ சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை புகார்
▪️ புகாரை விசாரித்த அந்நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரைத்தது
▪️ விசாகா குழுவின் பரிந்துரை ஒருதலைப்பட்சமானது என அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு
▪️ குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு பரிந்துரையை நீதிமன்றம் ரத்து செய்தது
▪️ தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் வழக்கு. புகாரளித்த பெண்களின் இருக்கைக்கு பின்னால் அந்த அதிகாரி நிற்பதாகவும், உடல் அளவைக் கேட்டதாகவும் நிறுவனம் தரப்பில் வாதம்
▪️ உயரதிகாரி என்ற முறையில் இருக்கைக்கு பின்னால் நின்று கண்காணித்தேன். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கம் இல்லை என அதிகாரி தரப்பு வாதம்
▪️ பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல்தான் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பு
#WorkPlace | #Harrasement | #Madras