.பெரியாருடன் முரண்படுவது என்பது வேறு, அதை பெரியாரே செய்துள்ளார். தனது கருத்து நிலைப்பாட்டுடன் அவரே அதிகம் முரண்பட்டுள்ளார், அது அவரது Imageயை பாதிக்கும் என்று அவர் என்றும் கவலைப்பட்டது இல்லை, காரணம் அவர் தனது Image குறித்தே யோசித்தது இல்லை. அதேபோல அவர் தன்னை எந்த எல்லை புனிதத்திற்குள்ளும் நிறுத்தியதில்லை அவரை நிறுத்தவும் முடியாது, அதனால் தான் பெரியாரை ‘A Man who Doesn’t Fit into Frames’ என்பார்கள். அவரின். ஒரே இலக்கு ‘சமத்துவம் சமூகநீதி’யாக தான் இருந்தது, அதற்காக தான் அவரின் வாழ்வு முழுவதும் பரிணாமம் அடைந்தது.
பெரியார் ஒடுக்குமுறைக்கு எதிராக நின்றார், ஒடுக்கப்பட்ட மக்களுடன் நின்றார். அதற்காக எல்லாவற்றையும் எல்லோரையும் பகைத்தார். பெரியாரின் மொழி கொஞ்சம் தடித்து தான் இருந்தது, அழகு தமிழில் தடவி கொடுக்க எல்லாம் அவர் முயன்றது இல்லை, காரணம் அதுதான் தான் ‘யாருக்காக பேசுகிறோமோ அவர்களுக்கும்’ ”யாருக்கு எதிராக பேசுகிறோமோ அவர்களுக்கும்’ உரைக்கும் என அவர் எண்ணினார். இதை வைத்தே இன்று பெரியாரை அவர் யாருக்காக அதிகம் உழைத்தாரோ, யாருக்காக மூத்திர சட்டி சுமந்து முதுமையிலும் கஷ்டப்பட்டாரோ அவர்களுக்கு எதிராக திருப்ப முயல்கின்றனர் சிலர். பெரியார் மீது சீமான் முன்வைத்த குற்றச்சாட்டை ஒட்டி தலித்-முஸ்லிம்-தமிழ்தேசியம் என மூன்று முகாம்களில் இருந்து சிலர் பெரியார் மீதான விமர்சனத்தை முன்வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதில் தெளிவுடன் இருக்க வேண்டிய அவசியம் எழுகிறது, காரணம் ‘பெரியார் நீக்கம்’ என்பது இங்கு பார்ப்பனியத்திற்கு தான் வலுசேர்க்கும். அந்த வகையில் இந்த விஷயத்தில் ஒரு தெளிவிற்கு பேராசிரியர் மார்க்ஸ் அவர்களின் ‘பெரியார்: தலித்கள் முஸ்லிம்கள் தமிழ்தேசியர்கள்’ எனும் நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
பெரியார் குறித்து தற்போது எழும் சில இருள்களுக்கு இந்த நூல் பெரும் வெளிச்சம் பாய்ச்சும்.
– Mohaideen Ansari Mis