★ நிலா வந்தது
பசி நிற்கவில்லை
சாலையோர குழந்தை.
★ மெல்ல வருடி
தூக்கம் தந்தது
மின்விசிறி.
★ இரவில் பயணம்
கவிழ்ந்த பேருந்து
எஞ்சின் மட்டும் உயிரோடு.
★ தூக்கம் வரவில்லை
புரண்டு படுத்தேன்
மகளின் திருமணம்.
★ வேலையில்லா பணம்
ஏழையின் சந்தோஷம்
இடைத்தேர்தல்.
★ இதய அறுவை
சிகிச்சைகாணாமல் போனது
கிட்னி.
★ அறுசுவை உணவு
அம்மனுக்கு படையல்
அம்மா காப்பகத்தில்.
★ பயிற்சி பெறாமல்
நன்றாக ஓடிய
ஃபைனான்ஸ் அதிபர்.
★ வெளிநாடு செல்வாய்
ஜோசியம் சொன்னது
கூண்டுக்கிளி.
★ பொது இடங்களில்
புகை பிடிக்காதீர்
போலீஸ் தவிர.
– வானவன் ( சென்னை சிம்சன் தொழிலாளர், இயற்கை ஆர்வலர் )