தொழிலாளர்களின் மரணங்கள்…..

இந்திய பிரதமரின் பாதுகாப்பு அமெரிக்க அதிபருக்கு இணையாக இருக்கிறது ஆனால்.. ஒரு தொழிலாளியும் பாதுகாப்பு இன்னும் இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. #சாக்கடை #மரணங்கள் இங்கே தினம் #தினம் நடக்கிறது காரணம் இங்கு சனாதன குப்பைகள் உள்ள இந்த தேசத்தில் யாருக்கெல்லாம் பாதுகாப்பு யாருக்கெல்லாம் மரணமே பாதுகாப்பு… 

யார்? இதைப்பற்றி கவலைப்பட போகிறார்கள்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கிறோம்..

சாக்கடை தொழில்நுட்பத்தில் அடி பாதாளத்தில் இருக்கிறோம். சாக்கடையை அள்ளுகிறவன் யார்? ராக்கெட் தொழில்நுட்பங்களில் இருப்பவன் யார்? என்ற கேள்விக்குள் நுழைந்தால் நமக்கு தலை சுற்றிவிடும் 

ஏனெனில் இப்போது #ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் எளிய மக்களில் படித்து மேலேக்கு வந்தவர்கள்…

ஆனால் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் யார்? அந்த நிறுவனங்களில் பணிபுரி பெரும்பான்மை.. சாக்கடை அள்ளும் தொழில் இன்னும் அடிமட்ட தொழில்களில் உள்ள பெரும்பான்மை யார்? என்கிற பட்டியல்களை நாம் எடுத்துப் பார்க்கும்போதுதான் அந்த #சனாதன குப்பைகளின் கேடுகெட்ட அமைப்புகளின் தந்திரம் நமக்கு புரிய வரும்.. #அறிவியல் வளர்ச்சியும் #தொழில்நுட்பங்களும் உழைக்கும் மக்களின் பாதுகாப்பை அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அல்லாமல் ஏற்கனவே கொழுத்து செழித்தவர்களின் நலனுக்காகவே இருக்குமானால் அந்த தொழில் நுட்பங்கள் எதற்கு?

தோழர் Karan karki அவர்களின் முகநூல் பதிவு

https://www.facebook.com/share/p/158uE8tPFf


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *