மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி பார்த்து நமக்கு வழங்கியது தான் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவம்.
வர்க்கங்கள் தோன்றாத புராதான பொதுவுடைமை சமூகத்தில் தனியுடைமைக்கு இடமில்லை அதனால் மனித சமூகம் கூட்டு சமூகமாக வாழ்ந்து வந்தது. வேட்டையாடியதை பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்தது.குரங்கிலிருந்து மனித சமூகம் எப்படி கைகளை பயன்படுத்தி பழங்களை பறிப்பது துவங்கி வேட்டையாட கற்றுக்கொண்டதோ அதுபோல புராதான பொதுவுடை சமூகத்தில் விலங்குகளை வேட்டையாடுவதிலிருந்து கால்நடைகளை வளர்க்க கொண்டதும் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் இடையே கால்நடைகளை கைப்பற்றுவதற்காக போராக மாறியது விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இது நிலங்களை கைப்பற்றும் போராக வளர்ச்சி பெற்றது இப்படி உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சி புராதான பொதுவுடைமை சமூகம் சிதைந்து சமூகம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்றது.
இனக்குழுக்களுக்கிடையேன மோதல் கால்நடைகளை கைற்றிய பிறகு அந்த இனக்குழுக்களை சேர்ந்தவர்களை அழித்துவிடும் முறை ஆரம்பத்தில் இருந்துள்ளது பிறகு மனிதர்களை அடிமைகளாக பயன்படுத்து முறை தோன்றியது அதன்பிறகு உலகம் முழுவதும் அடிமைகள் வியாபாரம் விரிவடைந்து அடிமைகள் கொடுமையான சுரண்டல்களுக்கு உள்கபட்டுள்ளனர் மனித குல வரலாற்றில் ஆண்டான் அடிமை சமூக முறை மிக கொடூரமாக இருந்துள்ளது. அடிமைகளை கொண்டு சமூகத்தில் அணைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட்டன இவை மேலும் செல்வத்தை குவித்து கொண்டே சென்றது .ஆண்டான் தனது போர் பகுதிகளை விரிவுபடுத்திகொண்டே சென்றான் இதனால் பொருளாதார உற்பத்திகள் முறைகள் வளர்ந்துகொண்டே சென்றது அதன் மூலமா அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தன. ஆண்டான் புகழ்பாடும் புலவர்கள், இதிகாசங்கள் என வளர்ந்து வந்தது நாம் பொரும்பாலு படிப்பது மன்னர்களின் வாழ்க்கைமுறையைதான் படிக்கிறோம் போர் ,வெற்றி வீரம் என ஆனால் இந்த செல்வ செழிப்புகான உழைக்கும் மக்களின் வாழ்க்கை மறைக்கபட்டே வந்துள்ளது . இந்த புத்தகத்தில் தமிழ் நிலப்பரப்பில் மார்க்சிய ஆய்வாளர் கோ.கேசவன் போன்றவர்களின் மேற்கொள்களுடன் விளங்குவதால் ஒவ்வொரு சமூகம் வளர்ச்சி கட்டத்திலும் ஒடுக்குமுறை வடிவங்காளன அரசு,மதம் சாதி என அனைத்தும் உற்பத்தி முறையுடன் எப்படி வளர்ச்சியடைந்து வந்துள்ளது என புரிந்தது கொள்ள உதவியாக இருந்தது.
ஆண்டான் அடிமை சமூகத்திலேயே உற்பத்தி சார்ந்து தொழில்கள் பிரிக்கப்பட்டது நிலவுடைமை சமூகத்தில் இது மேலு விரிவாக்கப்பட்டது நிலமான்ய முறைகள் எப்படி அரசானுக்கு சாதகமான வர்க்கங்களான படைத் தளபதிகள், புலவர்கள் ,மதத்தலைவர்கள் , பிராமணர்கள் என நிலங்கள் வழங்கப்பட்டு நிலவுடைமை சமூதாயம் விரிவுபடுத்தப்பட்டது.உழைக்கும் மக்களில் பெயரளவில் கிடைக்கப்பெற்ற நிலங்களுக்கு அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டன. சமண,சைவ மதங்களுக்கு இடையேயான மோதல்களையும் சைவ மதத்தின் எழுச்சி என அனைத்தையும் வர்க்க்க போராட்டங்களின் பார்வையில் விளக்கியது சிறப்பாக இருந்தது.
ஐரோப்பியாவில் ஏற்பட்ட தொழில் புரட்சி இந்திய துணைக்கண்டத்தில் எப்படி நிலவுடைமை வீழ்ச்சிக்கு முன்பாகவே காலனிய ஆட்சிமுறை ஏற்பட்டதால் தற்போது வரை நிலவுடைமை கூறகளை கொண்டே சமூகமாக இருந்து வருகிறது என விளக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேய ஆட்சிமுறை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் இறுதியில் சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் விட்டு சென்றுள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்ற அரசு வடிவங்கள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பதை விவாதிக்க வேண்டும்
இறுதியாக சோசலிச சமூகம் குறித்து இந்தியா போன்ற நாடுகளில் 1990 காலகட்டத்தில் போடப்பட காட் ஒப்பந்தத்தின் மூலமாக ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்கள் இங்கே வரத்தொடங்கியது. ஒரு பக்கம் ஏகாதிபத்தியம் திட்டங்கள் வளர்ச்சி அடைந்து வந்தாலும் நிலவுடைமை அமைப்பில் தோன்றிய சாதிய படிநிலை தற்போது வரை இருந்துதான் வருகிறது. உலக முழுவதும் மதம் சார்ந்த நிறுவனங்கள் உழைக்கும் மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து சுரண்டல் முறையை நீடித்து வருகிறது இதுபோன்ற காலகட்டத்தில் மார்க்சிய அடிப்படையிலான இது போன்ற புத்தகங்களை படித்து விவாதிப்பது அவசியமாகிறது.
உலக நிகழ்வுகள் பல தரவுகளுடன் விளக்கபட்டுள்ளதால் தத்துவம் புத்தகம் படிக்கும் எந்த சோர்வும் இல்லாமல் எளிமையாக படிக்க முடிகிறது தோழருக்கு வாழ்த்துக்கள்
-நே ராம் பிரபு
Leave a Reply